ஊரக வளர்ச்சி உறுதிப்பாடு நிகழ்ச்சி – மக்களின் நலனுக்காக ஓர் முக்கியமான முயற்சி
ஊரக வளர்ச்சி & வள நற்பணி இயக்கம் நடத்தும் "ஊரக வளர்ச்சி உறுதிப்பாடு" நிகழ்ச்சி, ம.கா.தே.ஊ.வே.உ.திட்டத்த்தின் கீழ் பணிபுரியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் ம.கா.தே.ஊ.வே.உ. திட்டப் பயனாளிகள் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகைகளைப் பெறலாம். பயனாளிகள் இந்த திட்டங்களில் உறுப்பினராகப் பதிவு செய்து, அதற்குரிய ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள்:
கல்வி உதவித் தொகை - கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்.
திருமண உதவித் தொகை - திருமண செலவிற்காக வழங்கப்படும் நிதி.
மருத்துவ உதவித் தொகை - ✔ பணித்தள விபத்திற்கான மருத்துவ செலவிற்கான நிதியுதவி.
✔ பணித்தள மரணங்களுக்கான ஈமக்கிரியை செலவின உதவித் தொகை.
✔ குடும்பத்தினருக்கான மருத்துவ செலவின உதவி.
முதியோர்களுக்கான உதவித் தொகை - 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதந்தோறும் நிதியுதவி.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி - மருத்துவம் மற்றும் பிற நலத்திட்ட உதவிகள்.
மகளிர் குழுக்களுக்கான கடன் உதவி - சுயதொழில் மேம்பாட்டிற்காக.
தொழிற்பயிற்சி வழங்குதல் - தொழில் முனைவோருக்கு பயிற்சி வழங்குதல்.
மருத்துவ முகாம்கள் நடத்துதல் - பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ சேவைகள்.
பயனாளி உறுப்பினர் சேர்க்கை:
பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் ஆண்டுதோறும் பயனாளி அடையாள அட்டை வழங்கப்படும்.
நிதி சந்தா திட்டங்கள்:
இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மக்களுக்கு உதவவும், கீழ்க்கண்ட சந்தா திட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்கலாம்:
- உஜ்ஜீவன் திட்டம் – ₹100
- உஜ்ஜாந்தீ திட்டம் – ₹200
- உஜ் ஸோனா திட்டம் – ₹500
இந்த திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க உதவலாம்.
தொடர்புக்கு:
94 88 88 83 86
"பாதுகாப்பு- விலை மிகுந்ததல்ல. விலைமதிப்பில்லாதது!"