தொழில் முனைவோருக்கான தொழிற் பயிற்சி

உஜ்ஜாந்தீ திட்டத்தில் இணைந்த பயனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக்கான அமைப்பு.

  • விண்ணப்பதாரர் பயனாளியாகவோ, பயனாளியின் நேரடி குடும்ப உறுப்பினராகவோ இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரரோடு இணைந்து பயிற்சி பெற அதே கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளை இணைத்துக்கொள்ளலாம்.
  • ஒரே கிராமத்தைச் சேர்ந்த 20 பயனாளிகள் விண்ணப்பித்தால், அதே கிராமத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இல்லையெனில், ஊராட்சி ஒன்றிய அளவில் ஒரு இடத்தில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்படும்.
  • எவ்விதமான தொழிற்பயிற்சி தேவை என்பதை விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கலாம்.
  • தொழிற்பயிற்சிக்குப் பிறகான நிதியுதவி வங்கிக்கடன் பெற உதவி ஆகியவை உஜ் ஸோனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் ஊராட்சியில் பணிநடைபெற்றுள்ள மொத்த வேலை நாட்களில் குறைந்தபட்சம் 50% வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • பதிவு செய்துள்ள நடப்பாண்டில் ஒரு முறை மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.
  • பயனாளி உஜ்ஜாந்தீ திட்டத்தின் வேறு உபதிட்டங்கள் எவற்றிலும் விண்ணப்பித்து பயன் பெற்றிருக்கக் கூடாது.