பணித்தள மருத்துவ உதவித் தொகை

உஜ்ஜாந்தீ திட்டத்தில் இணைந்த பயனாளிகளுக்கான பணித்தள மருத்துவச் செலவின உதவித்தொகை.

  • விண்ணப்பதாரர் பயனாளியாகவோ, பயனாளியின் நேரடி குடும்ப உறுப்பினராகவோ இருத்தல் வேண்டும்.
  • பணித்தளத்தில் ஏற்படும் விபத்து (அ) உடல்நலக்குறைவிற்கு பெறப்படும் சிகிச்சைக்கு மட்டுமே இது பொருந்தும்.
  • சிகிச்சைகான ஆவணங்கள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவச் செலவின பில், பணிபுரிந்த நாட்களின் NMR நகல், ம.கா.தே.ஊ.வே.உ. திட்ட அடையாள அட்டையின் முன்பக்கம் & உட்புற வருகைப்பதிவேடு ஆகியவற்றின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
  • பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் ஊராட்சியில் பணிநடைபெற்றுள்ள மொத்த வேலை நாட்களில் குறைந்தபட்சம் 50% வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • பதிவு செய்துள்ள நடப்பாண்டில் ஒரு முறை மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.
  • பயனாளி உஜ்ஜாந்தீ திட்டத்தின் வேறு உபதிட்டங்கள் எவற்றிலும் விண்ணப்பித்து பயன் பெற்றிருக்கக் கூடாது.