உஜ் ஸோனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நேரடி பயனாளிகளுக்கான ஈமக்கிரியை உதவித்தொகை.
பயனாளி பணித்தளத்தில் மரணித்திருக்க வேண்டும். அல்லது பணித்தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவோ, உடல்நலக்குறைவின் காரணமாகவோ மரணித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பயனாளியின் நேரடி குடும்ப உறுப்பினராகவோ, நேரடி வாரிசாகவோ இருத்தல் வேண்டும்.
இறப்புச் சான்று, வாரிசு சான்று, நடப்பாண்டின் NMR நகல், ம.கா.தே.ஊ.வே.உ. திட்ட அடையாள அட்டையின் வெளிப்புற அட்டை மற்றும் உட்புற வருகைப் பதிவேட்டின் நகல் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும்.
பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் ஊராட்சியில் பணிநடைபெற்றுள்ள மொத்த வேலை நாட்களில் குறைந்தபட்சம் 50% வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பயனாளி உஜ்ஸோனா திட்டத்தின் வேறு உபதிட்டங்கள் எவற்றிலும் விண்ணப்பித்து பயன் பெற்றிருக்கக் கூடாது.